செய்திகள்

பிரபல இயக்குநர் சிவாவின் தந்தை மரணம்

28th Nov 2020 02:37 PM

ADVERTISEMENT

 

தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநரான சிவாவின் தந்தை ஜெயக்குமார் காலமாகியுள்ளார். 

2011-ல் சிறுத்தை படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் சிவா. அடுத்ததாக அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை வரிசையாக இயக்கினார். தற்போது, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். 

சிவாவின் தந்தை ஜெயக்குமார், ஆவணப்படப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் ஜெயக்குமார் சென்னையில் மரணமடைந்துள்ளார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

ADVERTISEMENT

அஜித்துடன் இயக்குநர் சிவா
Tags : Siva Jayakumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT