செய்திகள்

ஆஸ்கருக்குச் செல்லும் ஜல்லிக்கட்டு!

26th Nov 2020 11:01 AM

ADVERTISEMENT

 

திரை உலகின் உயரிய விருதாக அகாதெமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன. வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி 93-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து மலையாளத் திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கருக்குச் செல்ல தன்னுடன் போட்டியிட்ட சகுந்தலாதேவி, கன்ஜன் சக்சேனா, தி சீரியஸ் மேன், புல்புல் உள்ளிட்ட 26 திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளித் தகுதி பெற்றுள்ளது ஜல்லிக்கட்டு திரைப்படம்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த ஜல்லிக்கட்டு, பலி கொடுக்கும் முன் தப்பிச் செல்லும் ஒரு மாடு, ஒரு ஊரே திரண்டு அதனை மீட்கும் முயற்சியை மையமாகக் கொண்ட திரைப்படம். கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.ஹரீஷ் எழுதிய மாவோயிஸ்ட் என்ற சிறுகதையின் நீட்சியே இந்த திரைப்படம். 

யதார்த்த வாழ்வியலைத் திரைப்படங்களாக்கும் கலையில் நம் ஊரில் மலையாளத் திரையுலகத்துக்கு நிகர் இல்லை என்றே கூறலாம். மலையாளத்தின் முக்கிய இயக்குநர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி கவனத்துக்குரியவர். இவரது இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த அங்காமாலி டயரீஸ் (2017), ஈ.மா.யூ (2018) திரைப்படங்கள் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பாராட்டுப் பெற்றவை. இந்த இரண்டு திரைப்படங்களும் கேரள அரசின் விருதையும் பெற்றவை.

ADVERTISEMENT

Tags : jallikattu Lijo Jose Pellissery
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT