செய்திகள்

ரெஜினா நடிக்கும் படம்: பூஜையுடன் தொடங்கியது!

25th Nov 2020 12:45 PM

ADVERTISEMENT

 

கொரில்லா படத்தை இயக்கிய டான் சாண்டியின் அடித்த படமான ஃபிளாஷ்பேக்கில் கதாநாயகியாக நடிக்கிறார் ரெஜினா.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ரெஜினா, இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சாம் சிஎஸ், ஒளிப்பதிவு - யுவா. 

2005-ல் வெளியான கண்ட நாள் முதல் படத்தில் நடிகையாக அறிமுகமானார் ரெஜினா. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா என ரெஜினா நடித்துள்ள படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT