செய்திகள்

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது: மலையாளப் படமான ஜல்லிக்கட்டு பரிந்துரை!

25th Nov 2020 03:45 PM

ADVERTISEMENT

 

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் நடிப்பில் உருவான ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ஜல்லிக்கட்டு படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய ஹிந்திப் படமான கல்லி பாய், ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா 2021 ஏப்ரல் 25 அன்று நடைபெறவுள்ளது.

மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை தேர்வுக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த மூன்று படங்களும் ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் பெறவில்லை என்கிற நிலைமை கடந்த வருடம் வரை தொடர்கிறது. ஜல்லிக்கட்டு இந்த நிலைமையை மாற்றுமா?

Tags : Jallikattu Oscars 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT