செய்திகள்

விஷால் - ஆர்யா நடிக்கும் எனிமி

25th Nov 2020 05:25 PM

ADVERTISEMENT

 

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்ததாக விஷால் - ஆர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலும் ஆர்யாவும் இதற்கு முன்பு இணைந்து நடித்தார்கள். 

இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்துக்கு எனிமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இசை - தமன். படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெடி, பா. இரஞ்சித் படம் என இரு படங்களில் ஆர்யா நடித்து வருகிறார். அதேபோல சக்ரா படத்தின் படப்பிடிப்பைச் சமீபத்தில் முடித்த விஷால், அடுத்ததாக இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகே தான் நடித்து இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பைத் தொடரவுள்ளார்.

Tags : Vishal Arya
ADVERTISEMENT
ADVERTISEMENT