செய்திகள்

சூர்யா படம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: இயக்குநர் பாண்டிராஜ் வேண்டுகோள்

24th Nov 2020 04:16 PM

ADVERTISEMENT

 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம். 

இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. 

ADVERTISEMENT

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன்பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தைத் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் பாண்டிராஜ் - சூர்யா இணையும் படத்தில் கதாநாயகியாக  ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இயக்குநர் பாண்டிராஜ் ட்வீட் செய்ததாவது:

சூர்யா40 படம் தொடர்பான உங்கள் ஆர்வத்தைப் புரிந்துகொள்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம். தயாரிப்பு நிறுவனம் விரைவில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் பட்டியலை அறிவிக்கும். சிறந்த படத்தை வழங்குவதற்காக அனைவரும் உழைத்து வருகிறோம் என்றார். 

Tags : Pandiraj Suriya 40
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT