செய்திகள்

450 மில்லியன் பார்வைகள்: யூடியூபில் புட்ட பொம்மா பாடல் சாதனை

24th Nov 2020 05:07 PM

ADVERTISEMENT

 

அலா வைகுந்தபுரம்லோ படத்தில் இடம்பெற்றுள்ள புட்ட பொம்மா பாடல் யூடியூபில் 450 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 

அலா வைகுந்தபுரம்லோ என்கிற தெலுங்குப் படம் கடந்த ஜனவரியில் வெளியானது. அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம் போன்றோர் நடித்தார்கள். இயக்கம் - த்ரிவிக்ரம். படம் வெற்றி பெற்றதோடு தமனின் இசையமைப்பில் உருவான புட்ட பொம்மா பாடல் ரசிகர்களைப் பெரிதளவில் கவர்ந்தது. பலர் இப்பாடலுக்கு நடனமாடி டிக்டாக் தளத்தில் விடியோ வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் பிப்ரவரியில் யூடியூபில் வெளியிடப்பட்ட புட்ட பொம்மா பாடலின் விடியோ வரவேற்பைப் பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது 450 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. படக்குழுவினர் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள்.

ADVERTISEMENT

 

Tags : Botta Bomm 450 million
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT