செய்திகள்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனெட்: டிசம்பர் 4-ல் வெளியாகிறது

23rd Nov 2020 10:17 AM

ADVERTISEMENT

 

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் டெனெட் (Tenet) என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா போன்றோர் நடித்துள்ள இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

டெனெட் படம், முதலில் ஜூலை 17 அன்று வெளிவருவதாக இருந்தது. பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இருமுறை வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாகக் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் டெனெட் படம் இந்தியாவில் டிசம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது. ஆங்கிலப் படமான டெனெட், இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 

Tags : Tenet
ADVERTISEMENT
ADVERTISEMENT