செய்திகள்

பிரபு தேவா திருமணம் செய்துகொண்டதை உறுதி செய்த சகோதரர் ராஜூ சுந்தரம்

DIN

நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

1994-ல் இந்து படத்தின் மூலமாக நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார் பிரபு தேவா. அதற்கு முன்பு பல படங்களில் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். 90களில் பிரபல நடிகராகவும் நடன இயக்குநராகவும் புகழ் பெற்றிருந்தார். 2004-ல் எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பிரபு தேவா, 2016-ல் நடித்த தேவி படம் வெற்றியடைந்த பிறகு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். 

2005 முதல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். கடந்த வருட இறுதியில் இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள்.

1995-ல் ரமலதாவைத் திருமணம் செய்தார் பிரபு தேவா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். 2008-ல் ஒரு மகன் உடல்நலக் குறைவால் இறந்து போனார். 2011-ல் பிரபு தேவாவும் ரமலதாவும் விவகாரத்து பெற்றார்கள். பிறகு, நடிகை நயன்தாராவைக் காதலித்தார் பிரபு தேவா. எனினும் சில வருடங்களில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து போனார்கள்.

இந்நிலையில் பிகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் சென்னையில் திருமணம் செய்துள்ளார் 47 வயது பிரபு தேவா. ஊரடங்குக் காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டுள்ளார்கள். இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரபு தேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம், பிரபு தேவாவுக்குத் திருமணம் ஆனது உண்மைதான். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT