செய்திகள்

எழில் இயக்கத்தில் நடிக்கும் பார்த்திபன், கெளதம் கார்த்திக்

23rd Nov 2020 04:50 PM

ADVERTISEMENT

 

எழில் இயக்கும் புதிய படத்தில் ஆர். பார்த்திபனும் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார்கள்.

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிப் புகழ் பெற்றவர் எழில். சமீபகாலமாக நகைச்சுவைப் படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக த்ரில்லர் வகைப் படத்தை இயக்கவுள்ளார்.

துப்பறியும் நிபுணராக கெளதம் கார்த்திக்கும் காவல்துறை அதிகாரியாக ஆர். பார்த்திபனும் நடிக்கும் படத்தை எழில் இயக்குகிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. சாய்பிரியா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ் குமார் எழுதிய நாவலின் அடிப்படையில் கதையை உருவாக்கியுள்ளார் எழில்.  

ADVERTISEMENT

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள், விஷ்ணு விஷால் நடித்துள்ள ஜகஜால கில்லாடி ஆகிய படங்களை எழில் இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் வெளியீட்டுத் தயாராக உள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT