செய்திகள்

அஜய் தேவ்கன் - அமிதாப் படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்

21st Nov 2020 04:44 PM

ADVERTISEMENT

 

அஜய் தேவ்கன் - அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங். 

அமிதாப் பச்சனும் அஜய் தேவ்கனும் கடைசியாக 2013-ல் வெளியான சத்யகிரஹா படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்நிலையில் மே டே என்கிற படத்தை அஜய் தேவ்கன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார். விமானி வேடத்தில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார் அஜய் தேவ்கன். 

இந்நிலையில் மே டே படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தேர்வாகியுள்ளார். விமானி வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

ADVERTISEMENT

டிசம்பரில் ஹைதராபாத்தில் மே டே படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

புஜ் படத்தில் அஜய் தேவ்கன் தற்போது நடித்து வருகிறார். கேபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். இந்தப் படம் தவிர பிரபாஸ் - தீபிகா படுகோன் நடிக்கும் படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Tags : Ajay Devgn RAKUL PREET
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT