செய்திகள்

திரையரங்கில் வெளியாகவுள்ள சல்மான் கானின் ராதே படம்

20th Nov 2020 05:16 PM

ADVERTISEMENT

 

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் - ராதே.

சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். 

ராதே படம் கடந்த மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் ராதே படமும் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் ராதே படம் திட்டமிட்டபடி அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். கடந்த வருட இறுதியில் இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள்.

Tags : Salman Khan OTT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT