செய்திகள்

நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடத் தடை

20th Nov 2020 12:57 PM

ADVERTISEMENT

 

சென்னை, நவ. 20: நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட முன்னாள் நண்பருக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்தார் விஜய்.

அமலா பாலுக்கும் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்பருக்கும் ராஜஸ்தானில் கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அமலா பாலுக்கும் தனக்கும் திருமணம் முடிந்து விட்டதாகக் கூறி, நிச்சயதார்த்தத்தின் போது இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். பின்னர், அமலா பாலின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் சிங்கிடம் நஷ்ட ஈடு கோரி அமலா பால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு  நீதிபதி என். சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமலா பாலின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாக பவ்னிந்தர் சிங் வரும் டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
 

Tags : Amala Paul boyfriend
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT