செய்திகள்

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா: பி.சி. ஸ்ரீராம் தகவல்

17th Nov 2020 03:19 PM

ADVERTISEMENT

 

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கி வருகிறார்கள். 

பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்குகிறார்கள். 9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன், ஹலிதா, பிஜாய் நம்பியார். அரவிந்த் சாமி ஆகியோர் இயக்குகிறார்கள். 

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், ரேவதி, நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். 

ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்கள். 

இந்நிலையில் நவரசா படத்துக்காக கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பது பற்றி பி.சி. ஸ்ரீராம் தகவல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கெளதம் மேனனின் படப்பிடிப்பில் உள்ளேன். சூர்யா நடிக்கும் இணையத்தில் வெளியாகும் படம் இது. படப்பிடிப்புத்தளம் இன்று உற்சாகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Tags : Suriya Gautham Vasudev Menon
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT