செய்திகள்

பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி: நெகிழ்ந்த அபர்ணா

17th Nov 2020 07:36 PM

ADVERTISEMENT

 

சென்னை: ‘பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’ என்று சூரரைப் போற்று திரைப்பட நாயகி அபர்ணா பாலமுரளி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தினை இயக்கிய சுதா கொங்கராவின் அடுத்த படமான ‘சூரரைப் போற்று’. இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

இவர் முன்னதாக எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

ADVERTISEMENT

அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இந்தப் படத்தில் நாயகன் சூர்யாவிற்கு நிகராக, பொம்மி என்கின்ற சுந்தரி பாத்திரத்தில்  கதாநாயகியாக அபர்ணா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ‘பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’ என்று அபர்ணா பாலமுரளி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ;சூரரைப் போற்று திரைப்படத்தினை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT