செய்திகள்

படப்பிடிப்புக்கு சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரபல ஹீரோ!

17th Nov 2020 09:30 PM

ADVERTISEMENT

 

சென்னை: பிரபல கோலிவுட் ஹீரோ ஒருவர் தனது படப்பிடிப்பில் பங்குபெற சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக்கி வரும் அரண்மனை–3 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படப்பிடிப்பில் பங்குகொள்ளத்தான் ஆர்யா செவ்வாயன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். தனது பயணத்தின்போது எடுத்த செல்பி புகைப்படங்களை, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் ‘கரோனா காலத்திற்குப் பிறகு முதன்முறையாக ரயில் பயணம். சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பாக இருப்பதுடன் தூய்மையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT