செய்திகள்

புகைப்படங்களுடன் ரசிகர்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொன்ன ஆர்ஆர்ஆர் குழுவினர்

13th Nov 2020 03:50 PM

ADVERTISEMENT

 

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ராஜமெளலி ஆகிய மூவரும் இணைந்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள். இதற்காக தனியாக போட்டோஷூட் நடத்தப்பட்டு அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Tags : RRR Jr NTR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT