செய்திகள்

நடிகை பிரியங்கா சோப்ராவின் புதிய ஆங்கிலப் படம்

13th Nov 2020 05:36 PM

ADVERTISEMENT

 

தனது புதிய ஆங்கிலப் படத்தின் புகைப்படங்களை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். 

2002-ல் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.

2018 டிசம்பரில் பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

வீ கேன் பி ஹீரோஸ்  என்கிற ஆங்கிலப் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். ராபர்ட் ரோட்ரிகஸ் இயக்கியுள்ள இந்தப் படம் புத்தாண்டன்று நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புகைப்படங்களை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். 

Tags : priyanka chopra We Can Be Heroes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT