செய்திகள்

சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் டீசரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்

13th Nov 2020 05:18 PM

ADVERTISEMENT

 

சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கவலுதாரி என்கிற கன்னடப் படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசை - சைமன் கே கிங். தயாரிப்பாளர் - தனஞ்ஜெயன்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கரோனா ஊரடங்கால் கபடதாரி படத்துக்கு மட்டும் ரூ. 1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: பல்வேறு காரணங்களுக்காக 200 நாள்கள் காத்திருந்த பிறகு கபடதாரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பல சவால்களைச் சந்தித்துள்ளோம். தாமதத்தால் ரூ. 1 கோடி இழப்பு இப்படத்துக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது. எனில் ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள் என்றார். 

Tags : Kabadadaari Teaser Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT