செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன்: போஸ்டர் வெளியீடு

13th Nov 2020 02:51 PM

ADVERTISEMENT

 

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு கோடியில் ஒருவன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி பெப்சி சிவா தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் அக்னி சிறகுகள் என்ற படத்திலும் இயக்குநர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் காக்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவுள்ள பிச்சைக்காரன் 2 படம் அதிகாரபூர்வமாகக் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார்.

இந்நிலையில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடி ஒருவன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. டிடி. .ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். மெட்ரோ, ஆள் படங்களை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

ADVERTISEMENT

இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : vijay antony Kodiyil Oruvan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT