செய்திகள்

தவறான பரிசோதனைக் கருவியினால் கரோனா தொற்று உறுதியான சிரஞ்சீவி!

13th Nov 2020 10:23 AM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று உறுதியானதாக பிரபல நடிகர் சிரஞ்சீவி சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார். எனினும் மூன்று விதமான பரிசோதனைகளின் முடிவில் தனக்கு தொற்று இல்லையென தற்போது அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருமான சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று சில நாள்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

படப்படிப்பில் கலந்து கொள்வதற்கு செல்வதற்கு முன்பு வழக்கமான நடைமுறைப்படி அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் முதலில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் தவறு ஏற்பட்டுள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட மூன்று விதமான பரிசோதனைகளுக்குப் பிறகு, எனக்கு கரோனா இல்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தவறான ஆர்டி பிசிஆர் கருவியினால் அப்படியொரு முடிவு வந்துள்ளது. இத்தருணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

சிரஞ்சீவி கடந்த 2008-ஆம் ஆண்டு ‘பிரஜா ராஜ்யம்’ கட்சியைத் தொடங்கி அரசியலில் களமிறங்கினாா். திருப்பதி சட்டப் பேரவைத் தொகுதியில் வென்ற அவா், அடுத்த சில ஆண்டுகளிலேயே தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தாா். 2012-ஆம் ஆண்டு காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்ட அவருக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பதவி வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு காங்கிரஸ் வலுவிழந்தது. சிரஞ்சீவியும் தீவிர அரசியலில் இருந்து விலகினாா்.

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இது சிரஞ்சீவி நடிக்கும் 152-வது படம். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு. 

Tags : Chiranjeevi Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT