செய்திகள்

சிரித்தேன், அழுதேன்: சூரரைப் போற்று படத்தைப் பாராட்டும் கேப்டன் கோபிநாத்

13th Nov 2020 11:08 AM

ADVERTISEMENT

 

சூரரைப் போற்று படத்தைப் பாராட்டி ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் கோபிநாத் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

கடந்த புதன் அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு கேப்டன் கோபிநாத் கூறியதாவது:

நேற்று இரவு சூரரைப் போற்று படத்தைப் பார்த்தேன். பல காட்சிகள் சிரிக்கவும் குடும்பக் காட்சிகள் அழவும் செய்தன. இந்தக் காட்சிகள் எல்லாம் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. என் மனைவி பார்கவி கதாபாத்திரம் அழகாக இருந்தது. 

சூரரைப் போற்று படம் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. அதிகமாகக் கற்பனைகள் கலந்திருந்தாலும் என்னுடைய சுயசரிதையின் நோக்கத்தைப் படம் சரியாகப் பிரதிபலித்திருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கராவுக்குப் பெரிய சல்யூட்

முன்னேறத் துடிக்கும் ஒரு தொழில்முனைவோரின் கதாபாத்திரத்தை சரியாகவும் வலுவாகவும் செய்திருக்கிறார் சூர்யா. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்தப் படம் பலருக்கும் உத்வேகமாக அமையும் என்று கூறியுள்ளார்.

Tags : Soorarai Pottru Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT