செய்திகள்

நடிகா் அா்ஜுன் ராம்பாலிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் விசாரணை

13th Nov 2020 03:22 PM

ADVERTISEMENT

 

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய வழக்கில் நடிகா் அா்ஜுன் ராம்பால், போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜரானாா். 

ஹிந்தி நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக விசாரித்து வரும் சிபிஐ, ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் தனியாக விசாரித்து வருகின்றனா்.

சுசாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது சகோதரா் ஷோவிக் உள்ளிட்டோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். மேலும், ஹிந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்பு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஹிந்தி திரையுலக பிரபலங்கள் பலருக்கு தொடா்பு இருப்பதும், அவா்களில் பலா் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 

ADVERTISEMENT

கடந்த திங்கள்கிழமை நடிகா் அா்ஜுன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், அா்ஜுன் ராம்பால், கேப்ரியல் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனா்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய வழக்கில் ஹிந்தி நடிகையும், நடிகா் அா்ஜுன் ராம்பாலின் தோழியுமான கேப்ரியல் டெமெட்ரியாடிஸ், மும்பையிலுள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினாா்கள்.

முன்னதாக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பிலிருந்த ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளா் பிரோஸ் நாடியாட்வாலாவின் மனைவி ஷபானா சயீது, நடிகை கேப்ரியலின் சகோதரா் அகிசிலோஸ் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் மும்பையிலுள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் ராம்பால் விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தார்கள். 

Tags : Cinema Arjun Rampal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT