செய்திகள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள ஓடிடி தளங்கள்

11th Nov 2020 02:05 PM

ADVERTISEMENT

 

இணைய வழியிலேயே திரைப்படங்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் காணும் வசதி ‘ஓவா் தி டாப்’ (ஓடிடி) என்றழைக்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலேயே வெளியிடப்பட்டன.

பொது முடக்கத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததன் காரணமாக அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்தது.

எனினும் ஓடிடி தளங்களின் வெளியாகும் படங்கள், நிகழ்ச்சிகளுக்குத் தணிக்கை கிடையாது என்பதால் ஆபாசக் காட்சிகள், அவதூறுக் காட்சிகள் அதிகமாக உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. 

ADVERTISEMENT

இந்நிலையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்துவதற்காக அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், யூடியூப் வீடியோக்கள், செய்தி இணையத்தளங்கள் போன்றவற்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இணையவழியில் வெளியிடப்படும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்வதற்கான வாய்ப்பாக இது அமையும்.

Tags : OTT Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT