செய்திகள்

தீபாவளிக்குப் புதிய படங்கள் வெளியீடு: பாரதிராஜா அறிக்கை

10th Nov 2020 02:41 PM

ADVERTISEMENT

 

அடுத்த இரு வாரங்களுக்குப் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, கடந்த மாா்ச் இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரையரங்க உரிமையாளா்கள் மற்றும் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் அனுமதி அறிவிப்பு வந்தவுடனேயே திரையரங்குகளைத் தயாா்ப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளன. இருப்பினும், புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடா்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

ADVERTISEMENT

திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்படி, துல்கா் சல்மானின் ‘கண்ணும், கண்ணு​ம் கொள்ளையடித்தால்’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’, ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு, விஜய் நடித்த பிகில், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் இன்று முதல் மீண்டும் திரையிடப்பட்டுள்ளன. ஆங்கில மற்றும் ஹிந்திப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அடுத்த இரு வாரங்களுக்குப் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டிஜிட்டல் புரொஜக்‌ஷன் நிறுவனங்கள் தற்காலிகமாக இரு வாரங்களுக்கு வி.பி.எஃப் இல்லை என அறிவித்துள்ளது. இதை எங்கள் சிறு வெற்றியாகக் கருதி வி.பி.எஃப். கட்டணம் இல்லாத இந்த இரு வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதேசமயம் வி.பி.எஃப். கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறியுள்ளார். 

Tags : Cinema vpf
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT