செய்திகள்

மகளுக்குப் பெண் குழந்தை: தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்

10th Nov 2020 12:25 PM

ADVERTISEMENT

 

நடிகர் விக்ரமின் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் சென்னையில் நடைபெற்றது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் இத்திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார். 

ADVERTISEMENT

இயக்குநர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் விக்ரமுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள். நீங்கள் நிச்சயமாக ஜாலியான தாத்தாவாக இருப்பீர்கள். குடும்பத்துக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

Tags : Vikram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT