செய்திகள்

ரஜினி பற்றி நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது: ஆர்ஜே பாலாஜி வருத்தம்

10th Nov 2020 05:33 PM

ADVERTISEMENT

 

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 14 அன்று மூக்குத்தி அம்மன் படம் வெளியாகிறது. 

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாவதைத் தொடர்ந்து, ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆர்ஜே பாலாஜி பதில் அளித்துள்ளார். ரஜினி பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

சூப்பர் ஸ்டாரின் பெரிய ரசிகன் நான். சிறிய வயதில் நாலாவது, ஐந்தாவது படிக்கும்போது ரஜினி நல்ல மனுஷன் என்று என் தாத்தா சொன்னார். இன்று அவரை அது என் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவர் நல்ல மனிதர், சூப்பர்மேன். தளபதி முதல் தர்பார் வரை ரஜினி பற்றி ஏராளமான நினைவுகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ஒரு பேட்டி அளித்திருந்தேன். பிறகு அதைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. அதுபோல பேசியிருக்கக் கூடாது என்று தோன்றும். அதற்காக நான் வருந்துகிறேன். அவர் நினைக்கும் எல்லாக் காரியமும் கைகூட வேண்டும் எனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்றார். 

Tags : Rajini
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT