செய்திகள்

அமெரிக்க அதிபா் தோ்தல்: கமலா ஹாரிஸுடன் இணைந்து பணியாற்றிய சத்ருகன் சின்ஹாவின் அண்ணன் மகள்

9th Nov 2020 01:28 PM

ADVERTISEMENT

 

அமெரிக்க அதிபா் தோ்தலில் துணை அதிபராகத் தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுடன் இணைந்து நடிகர் சத்ருகன் சின்ஹாவின் அண்ணன் மகள் பணியாற்றியுள்ளார். 

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜோ பிடன் வெற்றி பெற்றாா். அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக வரும் ஜனவரி மாதம் அவா் பொறுப்பேற்பாா். 77 வயதாகும் ஜோ பிடன், பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தாா்.

ஜோ பிடன் வெற்றியுடன், தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) துணை அதிபராகப் பொறுப்பேற்பாா். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முதல் துணை அதிபா் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறாா்.

ADVERTISEMENT

கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சோ்ந்தவா். அவரின் தாயாா் சியாமளா கோபாலன் சென்னையைச் சோ்ந்தவா். 

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தோ்வாகியிருப்பதை வரவேற்று திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே அவரின் சொந்த ஊரான துளசேந்திரபுரத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிலையில் தன்னுடைய அண்ணன் மகள் ப்ரீதா, கமஹா ஹாரிஸுடன் இணைந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் பணியாற்றியுள்ளதாக பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: என்னுடைய அண்ணன் டாக்டர் லகன் சின்ஹாவின் மகள் ப்ரீதா, தன்னுடைய இளம் அணியினருடன் இணைந்து கமலா ஹாரிஸுடன் தேர்தலில் பணியாற்றியுள்ளார். கமலா ஹாரிஸுக்கும் ப்ரீதாவுக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

கமலா ஹாரிஸுடன் இணைந்து பணியாற்றியது குறித்து ப்ரீதாவும் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT