செய்திகள்

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கரோனா பாதிப்பு

9th Nov 2020 11:22 AM

ADVERTISEMENT

 

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரஞ்சீவி கூறியதாவது:

ஆச்சார்யா படப்பிடிப்புக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டதில் துரதிர்ஷ்டவசமாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

ADVERTISEMENT

கடந்த ஐந்து நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கரோனாவிலிருந்து மீள்வது குறித்த தகவல்களை விரைவில் வெளியிடுகிறேன் என்றார். 

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இது சிரஞ்சீவி நடிக்கும் 152-வது படம். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு. 

ADVERTISEMENT
ADVERTISEMENT