செய்திகள்

பாலிவுட்டில் சாதிக்க விரும்புகிறேன்: ப்ரியா மணி

13th May 2020 12:19 PM

ADVERTISEMENT

 

தி ஃபேமிலி மேன், அடீட் போன்ற இணையத் தொடர்களாலும் ராவண் படம் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதாலும் பாலிவுட் ரசிகர்களுக்கு நன்குப் பழக்கமானவர் ப்ரியா மணி.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ப்ரியா மணி தெரிவித்ததாவது:

என்னால் ஒரு படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருந்த முடியும் என ஹிந்தி இயக்குநர்கள் எண்ணினால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன். ஹிந்திப் படங்களில் நடிப்பதன் மூலம் என் எல்லையை விரிவுபடுத்த எப்போதும் தயாராக உள்ளேன். இணையத் தொடர்களோ படமோ கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

1952-1962 காலக்கட்டத்திலான இந்தியக் கால்பந்தின் நிலைமையை விவரிக்கும் மைதான் என்கிற ஹிந்தி படத்தில் ப்ரியா மணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT