செய்திகள்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரசிகர்: தொலைபேசியில் நலம் விசாரித்த சிம்பு

8th May 2020 02:15 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரைத் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியிருக்கிறார் சிம்பு.

கடலூரைச் சேர்ந்த ஆனந்தன், எஸ்டிஆர் நற்பணி இயக்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவராக உள்ளார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்ட சிம்பு ஆனந்தனிடம் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார். விரைவில் குணமடைந்து விடுவீர்கள், கவலை வேண்டாம் என சிம்பு பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT