செய்திகள்

நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் 2-வது படம்!

16th Mar 2020 11:22 AM

ADVERTISEMENT

 

சமீபத்தில் வெளியான கன்னி மாடம் படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட், உடனடியாக அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.

‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் தனது 2-வது படத்தை இயக்குகிறார் போஸ் வெங்கட். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இப்படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

தயாரிப்பு - மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார், ஓளிப்பதிவு - இனியன் ஜே ஹாரிஸ், படத்தொகுப்பு - ஜியான் ஸ்ரீகாந்த், இசை - ஹரி சாய், பாடல்கள் - விவேகா, கலை - சிவசங்கர், சண்டைக்காட்சி - தினேஷ் சுப்பாராயன். 

ADVERTISEMENT

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வரும் என்றால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும் சுவாரசியமும் கலந்து உறவுகளோடும் உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது என்று இப்படம் பற்றிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bose Venkat
ADVERTISEMENT
ADVERTISEMENT