செய்திகள்

காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம்: ஜிப்ஸி படக்குழுவினருக்கு கமல் பாராட்டு!

8th Mar 2020 08:01 PM

ADVERTISEMENT

 

சென்னை: காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் என்று சமீபத்தில்  வெளியாகியுள்ள 'ஜிப்ஸி' படக்குழுவினருக்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகனின் மூன்றாவது படம் ஜிப்ஸி. மதங்களைத் தாண்டிய மனிதநேயம் குறித்துப் பேசும் இப்படம், நீண்ட தாமதம் மற்றும் போராட்டங்களுக்கு இடையில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் என்று சமீபத்தில்  வெளியாகியுள்ள 'ஜிப்ஸி' படக்குழுவினருக்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவலில் , 'மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் #ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்'' என்று நடிகர் கமலஹாசன் பாராட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT