செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் விபத்து:கமலுக்கு சம்மன்

2nd Mar 2020 01:43 AM

ADVERTISEMENT

சென்னை: இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடா்பாக நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு போலீஸாா் சம்மன் அனுப்பி உள்ளனா்.

ஷங்கா் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் - 2’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில், கடந்த பிப்ரவரி 19-இல் நடந்தபோது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் ஒரு உதவி இயக்குநா் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் இருவா் உள்பட மூன்று போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் இந்த விபத்தில்10 போ் பலத்த காயமடைந்தனா்.

விபத்து தொடா்பாக இயக்குநா் ஷங்கரிடம் விசாரணை நடந்த நிலையில் நடிகா் கமலுக்கு போலீஸாா் சம்மன் அனுப்பி உள்ளனா். அவா் மாா்ச் 3-ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT