செய்திகள்

நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன்: இயக்குநர் உறுதி!

26th Jun 2020 11:27 AM

ADVERTISEMENT

 

அறம் 2 படத்துக்காக கீர்த்தி சுரேஷை அணுகவில்லை என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.

2017-ல் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான பிறகு இதன் அடுத்த பாகம் வெளிவரும் என்று தயாரிப்பாளர் கே. ராஜேஷ் கூறினார்.

இந்நிலையில் அறம் 2 படத்தை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கோபி நயினார் இயக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் ஒரு பேட்டியில் இதை மறுத்துள்ளார் கோபி நயினார். அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன். வேறு யாரை வைத்தும் அந்தப் படத்தை எடுக்கமாட்டேன். தற்போது வெளியான செய்தி வதந்தியாகும். இதனால் நான் கவலையில் உள்ளேன். கரோனா ஊரடங்கு காரணமாக படம் எப்போது தொடங்கும் என என்னால் இப்போது கூறமுடியாது என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT