செய்திகள்

இது இன்னொரு பாகுபலி: புதிய ஹிந்திப் படம் பற்றி ரம்யா கிருஷ்ணன் உற்சாகம்

17th Jun 2020 11:04 AM

ADVERTISEMENT

 

பாகுபலிக்கு நிகரான மற்றொரு படத்தில் நடிப்பதாக ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கல்நாயக், கிரிமினல் உள்ளிட்ட சில ஹிந்திப் படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன், பாலிவுட்டில் அதிகப் படங்களில் நடிக்காதது பற்றி கூறியதாவது:

பாலிவுட்டிலிருந்து நான் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. நான் நடித்த சில ஹிந்திப் படங்கள் நன்றாக ஓடவில்லை. எனக்கு வந்த ஹிந்திப் பட வாய்ப்புகளிலும் நான் ஆர்வம் செலுத்தவில்லை. மேலும் தென்னிந்தியப் படங்களில் நான் தீவிரமாக நடித்து வந்தேன்.

ADVERTISEMENT

அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு தமிழ் - ஹிந்திப் படத்தில் நடிக்கவேண்டியது. ஆனால் ஒரு சில பிரச்னைகளால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேவுடன் இணைந்து ஒரு தெலுங்கு - ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறேன். 50% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கரண் ஜோஹர் இணைத் தயாரிப்பாளர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இது இன்னொரு பாகுபலியாக நிச்சயம் இருக்கும். பொது முடக்கம் முடிந்த பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT