கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தில் இடம்பெற்றுள்ள கோலமே பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஜூன் 19 அன்று அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.
மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். கீர்த்தி சுரேஷின் 24-வது படம் இது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கோலமே பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விவேக் பாட்டெழுத, சுஷா பாடியுள்ளார்.