செய்திகள்

அப்பாவாகப் போகிறேன்: நடிகர் நகுல் மகிழ்ச்சி!

17th Jun 2020 03:36 PM

ADVERTISEMENT

 

விரைவில் தந்தையாகப் போவதாக நடிகர் நகுல் அறிவித்துள்ளார்.

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.  

2016, பிப்ரவரி 28 அன்று ஸ்ருதியைக் காதல் திருமணம் செய்தார் நடிகர் நகுல். ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் விரைவில் தந்தையாகப் போவதாக நடிகர் நகுல் இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT