செய்திகள்

மோகன் லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள மரைக்காயர் படத்தின் வெளியீடு அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு!

17th Jun 2020 02:28 PM

ADVERTISEMENT

 

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள மலையாளப் படமான மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம், அடுத்த வருடம் வெளியாகும் என அறியப்படுகிறது.

மோகன் லால், அர்ஜூன், பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள பிரம்மாண்ட படம், மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம். ஒளிப்பதிவு - திரு, இசை - ரோணி ரபேல். தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த மார்ச் மாதம் இதன் டிரெய்லர் வெளியானது.

மரைக்காயர் படம் இந்த வருடம் மார்ச் 26 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

மலையாளத் திரையுலகம் இதுவரை காணாத பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட முடியாத நிலை உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமைகளும் விற்கப்பட்டு விட்டதால் உலகமெங்கும் ஒரே நாளில் வெளிவருவதுதான் உகந்ததாக இருக்கும். இதையடுத்து மரைக்காயர் படம் அடுத்த வருடம் தான் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT