செய்திகள்

காயத்ரி ரகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய்: டிரெய்லர் வெளியீடு!

15th Jun 2020 11:58 AM

ADVERTISEMENT

 

காயத்ரி ரகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

காயத்ரி ரகுராம் நடித்து இயக்கியுள்ள படம் - யாதுமாகி நின்றாய். கதாநாயகியாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர், சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையைப் படமாக எடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இசை - அஸ்வின் வினாயக மூர்த்தி.

பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போன நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் யாதுமாகி நின்றாய் படம் வரும் 19 அன்று வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT