செய்திகள்

நடிகர் சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம்: மைத்துனர் ஓ.பி. சிங்

15th Jun 2020 12:26 PM

ADVERTISEMENT

 

நடிகர் சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மைத்துனரும் காவல்துறை அதிகாரியுமான ஓ.பி. சிங் கூறியுள்ளார்.

கிரிகெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா். 

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் திரைத்துறை - விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் சுசாந்த் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் சுசாந்த் சிங்கின் மைத்துனரும் ஹரியாணாவின் கூடுதல் டிஜிபியாகவும் ஹரியாணா முதல்வர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வரும் ஓ.பி. சிங், சுசாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது மும்பைக்கு விரைந்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT