செய்திகள்

இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பில் பிரபல தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜனுக்குப் புதிய பதவி!

15th Jun 2020 02:06 PM

ADVERTISEMENT

 

இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்தியப் பிரிவு தலைவராக பிரபல தயாரிப்பாளரான டி.ஜி. தியாகராஜன் தேர்வாகியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸைச் சேர்ந்த டி.ஜி. தியாகராஜன் 40-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, சிவாஜி கணேசன் போன்றோர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த படங்களில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இவர்தான் தயாரித்தார். சின்னத்திரையில் 7,500-க்கும் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களின் எபிசோட்களைத் தயாரித்துள்ளார். அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளார். 

இந்நிலையில், இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்தியப் பிரிவு தலைவராக பிரபல தயாரிப்பாளரான டி.ஜி. தியாகராஜன் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்பு அவர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

ADVERTISEMENT

புதிய பதவிக்காக திரையுலகப் பிரபலங்கள் பலரும் தியாகராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT