செய்திகள்

எஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஸ்ரியா சரண்

11th Jun 2020 03:53 PM

ADVERTISEMENT

 

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, எஸ்.எஸ். ராஜமெளலி, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ் போன்றோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் 2021 ஜனவரி 8 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜய் தேவ்கன் ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரியா சரண் தேர்வாகியுள்ளார். இன்ஸ்டகிராம் உரையாடலில் ஒன்றில் இத்தகவலை ஸ்ரியா சரண் தெரிவித்துள்ளார். பிளாஷ்பேக் கதையில் நான் வருவேன். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று கூறிய ஸ்ரியா சரண், ஊரடங்கு காரணமாக ஸ்பெயினில் தற்போது உள்ளதாகவும் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு தொடங்கியவுடன் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT