செய்திகள்

பெண் இயக்குநரின் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அசோக் செல்வன்

11th Jun 2020 01:30 PM

ADVERTISEMENT

 

சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அசோக் செல்வனுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதன்மூலம் அவருடைய அடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் அசோக் செல்வனின் புதிய படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வனின் ஜோடியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். ஸ்வாதினி என்கிற புதிய இயக்குநர் இப்படத்தை இயக்கவுள்ளார். இவர், சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்நிலையில் அசோக் செல்வனின் புதிய படத்தின் பணிகள் பாடல் ஒலிப்பதிவுடன் தொடங்கப்பட்டுள்ளன. இசை - லியோன் ஜேம்ஸ். இவர்தான் ஓ மை கடவுளே படத்துக்கும் இசையமைத்திருந்தார்.

கரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும். தொடங்கிய 5-வது மாதத்தில் படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் எனப் படத் தயாரிப்பாளர் ஜே. செல்வகுமார் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Niharika Konidela ashok selvan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT