செய்திகள்

நவாசுதீன் சித்திக்கி நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் தயாரிக்கும் ஆங்கிலப் படம்!

11th Jun 2020 04:35 PM

ADVERTISEMENT

 

நோ மேன்ஸ் லேண்ட் என்கிற ஆங்கிலப் படத்தைத் தயாரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு இணைத் தயாரிப்பாளராகவும் அவர் உள்ளார். இத்தகவலை நவாசுதீன் சித்திக்கி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கி, ஆஸ்திரேலிய நடிகை மேகன் மிட்செல் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை வங்கதேச இயக்குநர் மொஸ்தொபா சர்வார் ஃபரூக்கி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார் மேகன் மிட்செல்.

ADVERTISEMENT

வங்கதேசத்தைச் சேர்ந்த நவாசுதீன் சித்திக்கி, ஆஸ்திரேலியப் பெண்ணான மேகன் மிட்செல்லை அமெரிக்காவில் சந்திப்பதால் உருவாகும் பிரச்னைகள் தான் மையக் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் இந்த மூன்று நாடுகளிலும் தற்போது நடைபெற்று வருகின்றன.

பொன்னியின் செல்வன், அயலான், கோப்ரா, 99 சாங்ஸ், தலைவன் இருக்கின்றான், ஆடுஜீவிதம் போன்ற படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT