செய்திகள்

விமானங்கள் மூலமாக 700 புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையிலிருந்து உ.பி. செல்ல உதவிய அமிதாப் பச்சன்

11th Jun 2020 05:41 PM

ADVERTISEMENT

 

4 விமானங்கள் மூலமாக 700 புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசம் செல்ல பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உதவியுள்ளார்.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு, வாழ்வாதாரத்தை இழந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் போக்குவரத்து வசதிகள் முடங்கியதன் காரணமாக தங்கள் சொந்த ஊா்களுக்கு நடந்தே திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

கரோனா தடுப்பு பொது முடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயா் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சிறப்பு ரயில், சிறப்புப் பேருந்துகளின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பேருந்து, ரயில் பயணங்களின் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக சில மணி நேரப் பயணத்தில் விமானங்கள் மூலம் அனுப்பலாம் என்று பலர் ஆலோசனை தெரிவித்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில், கேரளாவிலிருந்து ஒடிசாவுக்கு 169 புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் திரும்பியுள்ளார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் 4 விமானங்கள் மூலமாக 700 புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசம் செல்ல பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உதவியுள்ளார். ஒவ்வொரு விமானத்திலும் 180 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டார்கள். மேலும் இரு விமானங்கள் மூலம் கூடுதலாகத் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். இதுதவிர 10 பேருந்துகளில் 300 தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லவும் அமிதாப் பச்சன் உதவியுள்ளார். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் அமிதாப் பச்சனின் நெருங்கிய உதவியாளரும், ஏ.பி.கார்ப்பரேஷனின் மேலாண் இயக்குநரான ராஜேஷ் யாதவ் செய்துள்ளார்.

விமானம் மூலமாகச் சொந்த ஊருக்குச் சென்றுள்ள தொழிலாளர்கள் அனைவரும் அமிதாப் பச்சனுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்கள். அமிதாப்பின் இந்த உதவிகளுக்குச் சமூகவலைத்தளங்களில் ஏராளமான பாராட்டுகள் குவிந்துள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT