செய்திகள்

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது!

DIN

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் க/பெ. ரணசிங்கம் படமும் பொன்மகள் வந்தாள் படம் போல ஓடிடியில் நேரடியாக வெளியாகும் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால் இயக்குநர் விருமாண்டி இதை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

ஓடிடி தளங்களுடன் விவாதித்து வருகிறோம். இதனால் படம் திரையரங்கில் வெளியான பிறகு ஓடிடியிலும் வெளியாக வசதியாக இருக்கும். அதுதான் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதாகச் செய்தி வந்துள்ளது. திரையரங்கில் மக்கள் ரசிப்பதற்காகத்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே முதலில் திரையரங்கில் தான் படம் வெளியாகும். இரு நாள் படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளது. டப்பிங், ரெக்கார்டிங் பணிகளும் மீதமுள்ளன. டீசரை வெளியிட்டதற்குக் காரணம், படம் முடியும் தறுவாயில் உள்ளது என்கிற தகவலை வெளியிடுவதற்காகத்தான் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT