செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரம் 60 படத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கிறார்களா?

4th Jun 2020 01:32 PM

ADVERTISEMENT

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரம் 60 படத்தில் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். கரோனா ஊரடங்கு காரணமாக மே 1 அன்று வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது விக்ரமின் 60-வது படம். எனவே தற்போதைக்கு விக்ரம் 60 என அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் படம் என இரு படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் விக்ரம்.

இந்நிலையில் விக்ரம் 60 படத்தில் விக்ரமும் அவருடைய மகன் துருவ்-வும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதித்ய வர்மா படத்தின் மூலம் திரையுலகில் துருவ் அறிமுகமானார்.

விக்ரம் 60 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT