செய்திகள்

ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொள்கிறேன்: கமல் உருக்கம்

28th Jul 2020 03:02 PM

ADVERTISEMENT

 

தமிழ்த் திரையுலகின் ஜாம்பவானும் தயாரிப்பாளருமான ஏ.வி. மெய்யப்பனின் 113-வது பிறந்த நாளன்று அவரைப் பற்றி ட்வீட் செய்துள்ளார் கமல் ஹாசன். 

கமல் கூறியுள்ளதாவது:

என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு ஏ.வி. மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

ADVERTISEMENT

ஏ.வி. மெய்யப்பன் பற்றிய ஆவணப் படத்தை ஏவிஎம் நிறுவனம் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT