செய்திகள்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வங்காள நடிகையின் குடும்பம்!

11th Jul 2020 11:29 AM

ADVERTISEMENT

 

வங்காள மொழி நடிகை கொயல் மாலிக் மற்றும் அவருடைய தந்தையும் மூத்த நடிகருமான ரஞ்சித் மாலிக் போன்றோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கொயல் மாலிக். தானும் தனது பெற்றோரும் தனது கணவர் நிஷ்பல் சிங்கும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் 5-ம் தேதி கொயல் மாலிக்குக்குக் ஆண் குழந்தை பிறந்தது.

வெள்ளியன்று மேற்கு வங்கத்தில் 1,198 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு, ஒரு நாளில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இதுவரை மேற்கு வங்கத்தில் 27,109 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று 26 பேர் இறந்துள்ளார்கள். இதனால் அங்கு கரோனாவால் இதுவரை 880 பேர் இறந்துள்ளார்கள். 

ADVERTISEMENT

Tags : Koel Mallick
ADVERTISEMENT
ADVERTISEMENT